ஒரு போன் போதுமே!

Added : டிச 04, 2019
Advertisement

இன்பாக்ஸ்

கான்சாபுரத்தில் தெருப்பாலம் சேதம்

வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் ஊராட்சியில் தெருப்பாலம் உடைந்து கம்பிகள் நீட்டிக்கொண்டுள்ளது. மேட்டுதெரு பகுதியில் நுாற்றுக்கு மேற்பட்ட வீடுகளும், அரசு பள்ளியும் உள்ளது. அப்பகுதி மாணவர்கள் இதை கடந்து செல்லும்போது தவறி விழுகின்றனர். இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் விபத்திற்கு ஆளாகின்றனர்.

- கோலப்பன்,கான்சாபுரம்

ரோட்டில் தேங்குது மழைநீர்

ராஜபாளையம் அய்யனார் கோயில் செல்லும் வழயில் மழைநீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் திணறியபடியே ஊர்ந்து செல்கின்றனர். இத்தேக்கத்தில் கொசுக்களின் உற்பத்தியும் ஜோராக நடக்கிறது. போக்குவரத்து நெருக்கடி உள்ள இந்த ரோட்டில் தேங்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.

- ஷாம்லி, ராஜபாளையம்

பாலையம்பட்டியில் சேதமான இ-சேவை மையம்

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி கொத்தனார் காலனியில் கட்டப்பட்டுள்ள இ-சேவை மைய கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சிதிலமடைந்து உட்பகுதியில் உள்ள பேன்கள், மின் விளக்குகள் திருடு போயுள்ளன. இதனால் , லட்சக்கணக்கில் அரசு பணம் வீணாகி கிடக்கிறது.

- சுந்தர மகாலிங்கம், பாலையம்பட்டி.

நடுரோட்டுல குப்பை தொட்டி

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் நடுவில் குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டுஉள்ளது. இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி செல்கின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குப்பைத்தொட்டியை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- காளிமுத்து, ராஜபாளையம்
சேதமடைந்த ரோடால் அவதி

சாத்துார் எதிர்கோட்டையில் இருந்து குண்டாயிருப்பு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கிறது. இருசக்கரவாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். புதிய ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கன்னியப்பன், குண்டாயிருப்பு.

வாசகர் 'வாய்ஸ்'

பணியாளர்கள் பற்றாக்குறை

கிராமப்புறப் பகுதிகளில் மின்வாரியத்தில் களப்பணியாளர்கள் போதிய அளவு இல்லாததால், மின் பழுது நீக்கும் பணிகள் பாதிக்கப்படுகிறது. பொதுமக்களில் சிலர் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் டிரான்ஸ்பார்ம்களில் ஏறி பியுஸ் போடுவது, மின்கம்பங்களில் ஏறி பல்பு பொருத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில விபத்துகளும் நடக்கிறது. இப்பிரச்னையை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.

- மாதேஷ், விருதுநகர்

---குழாய் உடைப்பால் குடிநீர் வீண்

விருதுநகர் நகராட்சியில் பல இடங்களில் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர், சாலைகளில் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது. நகரின் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் பராமரிப்பு என்பது திருப்திகரமாக நடக்கவில்லை. குடிநீர் குழாய் உடைப்புகளை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காளீஸ்வரி, விருதுநகர்.
செயல்படாத கால்வாய் திட்டம்
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் சென்னம்பட்டி கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் மல்லாங்கிணர் பகுதியில் உள்ள 100 க்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செழிக்கும். அதுபோல் திருச்சுழி பகுதியில் உள்ள குண்டாற்றில் சவுடு மணல் என்ற பெயரில் ஆற்று மணலை அள்ளப்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

- முரளி, திருச்சுழி.

படையெடுக்கும் கொசுக்கள்

விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சி பராசக்தி நகரில் உள்ள ஓடையில் பாலாஜி நகரில் இருந்து வரும் கழிவுநீர் பல ஆண்டுகளுக்கு மேலாக தேங்கியுதால் துர்நாற்றத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். துார்வாரப்படாத ஓடை முழுவதும் குப்பை கொட்டும் குப்பைத் தொட்டியாக மாறியுள்ளது. புதர்மண்டிய கருவேலம் மரங்களாலும் தேங்கிய மழைநீராலும் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக உள்ளது. ஓடை துார்வார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தனபாலன், பராசக்தி நகர்.---


98940 09507



குடிநீர், தெருவிளக்கு, சாலை, போக்குவரத்து உள்ளிட்ட எந்த பொதுப்பிரச்னையாக
இருந்தாலும் 98940 09507 என்ற எண்ணில் காலை 9:30 -10:30 மணி வரை தெரிவியுங்கள்.
புகைப்படமாக இருந்தால்mdubranches@dinamalar.inமெயிலில் அனுப்பலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X