பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதியில் மெகா சைஸ் குழியால் ஆபத்து| Dinamalar

பஸ் ஸ்டாண்ட் முகப்பு பகுதியில் 'மெகா சைஸ்' குழியால் ஆபத்து

Added : டிச 04, 2019
Share

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் வெளியேறும் முகப்பு பகுதிகளில், மெகா சைஸ் குழி இருப்பதால், ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சியில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. அதில், பழைய பஸ் ஸ்டாண்டில், உடுமலை, திருப்பூர், பழநி, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன.தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்களும்; 2,000க்கும் மேற்பட்ட பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் வெளியேறும் முகப்பு பகுதியில் உள்ள ரோட்டில், மெகா சைஸ் குழிகளாக உள்ளன. இதனால், ஓட்டுனர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். குழியில் மழைநீர் தேங்குவதால், கொசுத்தொல்லை அதிகரித்து பொது சுகாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.'பஸ்கள் வெளியேறும் இடத்தில், குழிகள் இருப்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை சீரமைக்க வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால், பஸ்கள் வெளியேற சிரமப்படுகின்றன.நகராட்சி நிர்வாகம், குழியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X