பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விளைச்சல் பாதிப்பு

Added : டிச 04, 2019
Advertisement

ஆண்டிபட்டி,:ஆண்டிபட்டியில் மழையால் தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இப்பகுதியில் கடந்த சில மாதத்திற்கு முன் பல ஏக்கர் நிலங்களில் தக்காளி நடவு செய்யப்பட்டது. செடிகள் வளர்ந்து பழங்கள் தரும் நிலையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தக்காளி செடிகளுக்கு நீருடன் வெயிலும் அதிகம் தேவைப்படும். வெயில் இல்லாததால் செடிகள், தக்காளி பழங்கள் பாதிப்படைந்து விளைச்சல் குறைந்து போனது. விளைந்த தக்காளியில் ஈர மண் ஒட்டிக்கொள்வதால் பறித்த பழங்களை சுத்தம் செய்ய வேண்டி உள்ளது.விவசாயிகள் கூறியதாவது:தக்காளி விளைச்சல் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என்றாலும் தொடர்ச்சியான மழை பெய்தால் பாதிப்படையும். கடந்த சில மாதத்திற்கு முன்பு நடவு செய்யப்பட்ட செடிகள் பலன் தரும் நிலையில் மழையால் பாதிப்படைந்து விட்டது. ஒரு முறை பாதிப்படைந்தால், மீண்டும் அதனை சரிசெய்ய இயலாது. விளைந்த தக்காளி ஈரத்தில் சாய்வதால் மண் ஒட்டிக்கொள்கிறது. தற்போது தக்காளி 15 கிலோ கொண்ட பெட்டி ரூ. 200 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது. விலை கிடைத்தாலும், விளைச்சலில் பாதிப்பு கவலை ஏற்படுத்தி உள்ளது, என்றனர். ----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X