சுருளி அருவியில் 4வது நாளாக குளிக்கத்தடை| Dinamalar

சுருளி அருவியில் 4வது நாளாக குளிக்கத்தடை

Added : டிச 04, 2019

கம்பம் :மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடித்தது.மேகமலையில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ைஹவேவிஸ், வெண்ணியாறு, மணலாறு, இரவங்கலாறு அணைகள் நிரம்பியுள்ளன. அதிகப்படியான தண்ணீர் சுருளி அருவி பகுதிக்கு திருப்பி விடப்படுகிறது. காட்டாற்று ஓடைகளின் மூலம் கிடைக்கும் தண்ணீரும் அருவியில் வெள்ளமென கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி நவ.30 ல் குளிக்க விதிக்கப்பட்ட தடை , நேற்று நான்காவது நாளாக நீடித்தது. இதனால் சுருளி அருவி வெறிச்சோடியது. இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X