பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர் விடுதி அருகே கழிவுநீர் தேக்கம்: நோய்த்தாக்குதல் அபாயம்

Added : டிச 04, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பிற்படுத்தப்பட்டோர் விடுதி அருகில், அகத்தியர் நகரின் சாக்கடைக்கழிவுகள் தேக்கப்படுவதால், மாணவர்கள் சுகாதாரக்கேடால் தவிக்கின்றனர்.மடத்துக்குளம் அகத்தியர்நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதற்கு அருகில், மிக பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி உள்ளது. விடுதிக்கு அருகில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, இங்குள்ள தெருக்களின் சாக்கடைகள் அதில் இணைக்கப்பட்டுள்ளன.கழிவுகள் வழிந்தோடாமல் பல மாதங்களாக தேங்கியுள்ளதால், லட்சக்கணக்கான கொசு மற்றும் புழுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்களுக்கு நோய்த்தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.சாக்கடைக்கழிவுகளை மாணவர்கள் தங்கியுள்ள இடத்தில் தேக்கி வைத்துள்ளது ஆபத்தானது. இதோடு இதற்கு அருகில் அரசுமேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானமும் உள்ளது.இதை தினமும், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே கழிவுகளை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X