* கழுத்து வலிக்கான காரணம்
கம்ப்யூட்டர் பயன்பாடு, அலைபேசியை பார்ப்பதால் கழுத்து வலி ஏற்படுகிறது . கழுத்தை குனிந்து கொண்டே தொடர்ந்து அலைபேசியை பயன்படுத்தும் போது வலி துவங்குகிறது.
அலைபேசியில் கேம்ஸ் விளையாடுவதால் சிறுவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

* கழுத்துவலி எவ்வாறு பரவும்
கழுத்து வலி முதலில் கழுத்தில் உணர்ந்தாலும் முதுகெலும்பு பிரச்னைகளாலும் ஏற்படலாம். கழுத்து, மேல் முதுகு இரண்டிலும் தசை இறுக்கம் அல்லது முதுகெலும்பிலிருந்து வெளிப்படும் நரம்புகளை ஜவ்வு அழுத்துவதன் காரணமாக கழுத்து வலி ஏற்பட்டு வலி பரவும்.
* வேறு எந்த விதத்தில் கழுத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
நமது தலை நேராக இருக்கும் போது 4 கிலோ எடை உள்ள எலும்புகளை நமது கழுத்து பகுதி தாங்கி கொள்ளும். இதுவே 15 டிகிரியில் கழுத்து குனியும் போது 12 கிலோ எடை, 30 டிகிரியில் 17 கிலோ, 45 டிகிரியில் 20 கிலோ, 60 டிகிரியில் 27 கிலோ எடையை கழுத்து சுமக்கிறது. வேறுபட்ட அதிக அளவு எடையானது கழுத்திலுள்ள தசை நார்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கிறது.
இதனால்தான் கம்ப்யூட்டர், அலைபேசியை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு அதிக அளவில் கழுத்து வலி ஏற்படுகிறது.
* கழுத்துவலிக்கான அறிகுறிகள்
தலை முன்னோக்கி நகர்ந்திருப்பது, சிலருக்கு பின் கழுத்தில் மேடான பகுதி உருவாகியிருப்பது (வலியில்லாத வீக்கமான பகுதி), தோள்பட்டை வழக்கத்தை விட முன்னோக்கி நகர்ந்திருப்பது, சில நேரங்களில் கழுத்து இயக்கத்தில் ஏற்படும் வலி, தோள்பட்டை, கை, விரல்களில் ஏற்படும் மதமதப்பு, தலைவலி, தலை சுற்றல் கழுத்து வலியின் அறிகுறிகளாகும்.

*இதை தவிர்ப்பது எப்படி
கம்ப்யூட்டர் மற்றும் அலைபேசியை பயன்படுத்துபவர்கள் தலையை நேராக வைத்து கொண்டு கண்ணிற்கு நேர் எதிராக வைத்து பயன்படுத்த வேண்டும். தசைகள் இறுக்கத்தை குறைக்க, தளர்வடைய செய்யும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பலவீனமான தசைகளை பலப்படுத்த பயிற்சி செய்ய வேண்டும். நாற்காலி அல்லது கீழே அமரும் போது சரியான உடல் மற்றும் முதுகெலும்பு அமர்வை மேற்கொள்வது அவசியம். அன்றாட செயல்களில் கழுத்தை கவனித்து கொள்வது அவசியம்.
டாக்டர் சி.டேவிட் பிரேம் குமார்
பிசியோதெரபி்ஸ்ட்
அருப்புக்கோட்டை
96777 24772
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE