நெல் கொள்முதல் நிலையம் கம்பத்தில் திறக்கப்படுமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் கொள்முதல் நிலையம் கம்பத்தில் திறக்கப்படுமா

Added : டிச 04, 2019
Share
கம்பம்:கம்பத்தில் நெல் அறுவடை துவங்கியுள்ளதால் அரசின் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாகபெரும்பாலான பகுதிகளில் நெற் கதிர்கள் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனி னும் மழை நின்றால், அறுவடை

கம்பம்:கம்பத்தில் நெல் அறுவடை துவங்கியுள்ளதால் அரசின் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாகபெரும்பாலான பகுதிகளில் நெற் கதிர்கள் சாய்ந்துவிட்டன. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனி னும் மழை நின்றால், அறுவடை முழுவீச்சில் துவங்க வாய்ப்புள்ளது. எனவே அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.விவசாயிகள் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் கூறுகையில், 'அதிக மழை காரணமாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பின் முழுவீச்சில் அறுவடை துவங்கும். எனவே அரசின் சார்பில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விவசாய சங்கம் சார்பில் மனு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X