வால்பாறை:எஸ்.எஸ்.ஏ., சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி பகல் நேர பாதுகாப்பு மையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நடனப்போட்டி, பலுான் ஊதுதல் போட்டி, முறுக்குகடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் பரிசு வழங்கி பேசும்போது,மாற்றுத்திறனாளி மாணவர்களை, எப்போதும் அரவணைத்து செல்ல வேண்டும். உடல் ஊனத்தை பெரிதுபடுத்தாமல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் திறமையாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்.பள்ளியில் நடைபெறும் எல்லா விழாக்களிலும், மாணவர்கள் கலந்து கொண்டு, இது போன்ற பரிசுகளை பெற வேண்டும், என்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.