சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பகலில் முகாமிடும் காட்டு யானைகள்

Added : டிச 04, 2019
Advertisement

தேவாரம்:தேவாரம் தோட்டப்பகுதியில் பகலில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.தேவாரம் வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள், இரவில் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாகும். கடந்த சில நாட்களாக பகலில் அவை வனப்பகுதியை விட்டு தோட்டங்களுக்குள் புகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி பழனி கூறுகையில், 'சபரிமலையில் மண்டல பூஜை எதிரொலியாக, தேவாரம் வனப்பகுதிக்கு இரண்டு யானைகள் இடம் பெயர்ந்துள்ளன. இவை பகலில் வனப்பகுதியை விட்டு இறங்குவதால், மலையடிவார தோட்டங்களில் பணிகள் பாதிப்படைந்துள்ளன. யானை நடமாட்டமிருப்பதால், மலையடிவாரத்தை ஒட்டியுள்ள நிலங்களில் சோளம், கரும்பு பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்து விட்டனர். அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து, பயிர்களை காப்பாற்ற வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X