மடத்துக்குளத்தில் உள்ளாட்சி தேர்தல்: ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்

Added : டிச 04, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட 11 ஊராட்சிகளுக்கு, டிச., 30ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்துள்ளது. இதில், மடத்துக்குளம் ஒன்றிய பகுதியிலுள்ள, 11 ஊராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாக டிச., 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.மடத்துக்குளம் ஒன்றியத்தில், 11 ஊராட்சி உள்ளன. இதில், மெட்ராத்தி, ஒன்பது வார்டு, துங்காவி, 12 வார்டு, தாந்தோனி, ஆறு வார்டு, வேடபட்டி, ஒன்பது வார்டு, சோழமாதேவி, ஒன்பது வார்டு, காரத்தொழுவு,ஒன்பது வார்டு, கடத்துார், ஒன்பது வார்டு, ஜோத்தம்பட்டி, ஒன்பது வார்டு, மைவாடி, 12 வார்டு, பாப்பான் குளம், 12 வார்டு, கொழுமம், 9 வார்டு என மொத்தம், 105 வார்டுகள் கொண்டுள்ளன.ஊராட்சி பகுதியிலுள்ள, 105 வார்டுகளுக்கு, பொதுப்பிரிவில், 39 உறுப்பினர், பொது பெண் பிரிவில், 43 உறுப்பினர், ஆதிதிராவிடர்பொதுப்பிரிவில், 10 உறுப் பினர், ஆதிதிராவிடர் பெண் பிரிவில், 13 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.இதுதவிர, 11 ஊராட்சித்தலைவர், ஒரு மாவட்ட கவுன்சிலர், ஒன்பது ஒன்றிய கவுன்சிலர்கள் பொறுப்புக்கும் பிரதிநிதிகள் தேர்வு செய்ய,மக்கள் ஓட்டளிக்க, 80 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக வரும் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X