பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி ஓட்டில் 89 ஊராட்சி தலைவர்கள் : உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு தீவிரம்

Added : டிச 04, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில், 89 ஊராட்சி தலைவர்கள்,618 வார்டு கவுன்சிலர்கள், ஆறு மாவட்ட கவுன்சிலர்கள், 43 ஒன்றியகவுன்சிலர்கள், உள்ளாட்சி தேர்தலில், மக்களால்நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.தமிழ்நாட்டில், முதல் கட்டமாக, கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் தேர்ந்தெடுப்பதற்கான, உள்ளாட்சி தேர்தல் வரும், 27 மற்றும் 30 ஆகிய, தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 17 ஒன்றிய கவுன்சிலர்கள், 39 ஊராட்சி தலைவர்கள், 303 வார்டு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மக்கள் நேரடியாக ஓட்டளித்து, ஊராட்சி தலைவர்கள் மற்றும் 303 வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.இத்தேர்தலில், 90 ஆயிரத்து, 438 ஆண், பெண்கள், ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.பொள்ளாச்சி தெற்குபொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் இருந்து, 26 ஊராட்சி தலைவர்கள், 210 வார்டு கவுன்சிலர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர, இரண்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 13 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களை, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 72 ஆயிரத்து, 398 வாக்காளர்கள் ஓட்டு போட்டு, தேர்ந்தெடுக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.ஆனைமலை ஒன்றியம்ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில், 105 வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. 72 ஆயிரத்து, 320 வாக்காளர்கள் உள்ளனர். தவிர, ஒன்றியத்தில், இரண்டு மாவட்ட கவுன்சிலர்கள், 13 ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X