பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளை ஈ கட்டுப்படுத்த அதிகாரிகள் 'அட்வைஸ்'

Added : டிச 04, 2019
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. ஒரு கோடி தென்னை மரங்களுக்கு மேல் உள்ளன. தென்னையில் 'வெள்ளை ஈ' பெரும் அளவு பாதிப்பை ஏற்படுத்துவதால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கின்றனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், வெள்ளை ஈ தாக்குதல்கள் அதிக அளவில் காணப்படுகிறது. தாக்குதலை கட்டுப்படுத்த, தென்னை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் ராஜேஸ்வரி, உதவிப்பேராசிரியர் அழகர், சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டு உள்ள அறிக்கை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், சவுகாட் ஆரஞ்சு குட்டை மற்றும் பச்சை குட்டை, மலேசிய மஞ்சள் குட்டை மற்றும் ஆரஞ்சு குட்டை, சவுகாட் பச்சை குட்டை மற்றும் கென்தாளி குட்டை ரகங்களில், அதிக அளவில் தாக்குதல்கள் காணப்படுகிறது. குட்டை நெட்டை, நெட்டை குட்டை ரகங்களில் ஓரளவுக்கும், நெட்டை ரகங்களில் மிகக்குறைவாகவும் தாக்குதல் காணப்படுகிறது.மஞ்சள் பாலித்தீன் ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு, பத்து என்ற எண்ணிக்கையில், ஆறு அடி உயரத்தில் வைத்து, ஏக்கருக்கு, இரண்டு விளக்குப்பொறிகள் இரவில் வைக்க வேண்டும். ஏக்கருக்கு, 300 'கிரைசோபிட்' முட்டைகளையும், 'என்கார்சியா' ஒட்டுண்ணி குளவி விட வேண்டும்.வெள்ளை ஈக்களுக்கு இயற்கை எதிரிகளான 'என்கார்சியா' ஒட்டுண்ணி, 'கிரைசோபிட்' இரை விழுங்கிகள், பொறி வண்டுகள் பெருக, தோப்பில், சாமந்தி, சூரியகாந்தி உள்ளிட்ட பூக்கள், தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் ஊடுபயிர் சாகுபடி செய்ய வேண்டும்.மிக அதிக அளவில் தாக்குதல் இருந்தால், ஒரு லி., நீரில், 30 மில்லி வேம்பு எண்ணெய் அல்லது இரண்டு மில்லி 'அசாடிராக்டின்' அளவில், ஒட்டுத்திரவம் அல்லது சோப்புடன் கலந்து தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தெளிக்கவும். ரசாயன உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கி, கனமழை பெய்யும் போது, வெள்ளை ஈக்களின் வீரியம் குறைந்து அவற்றின் தாக்குதல் குறையும். தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள், 'என்கார்சியா' ஒட்டுண்ணி, 'கிரைசோபிட்' இரை விழுங்கிகளை விலைக்கு பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X