பொது செய்தி

தமிழ்நாடு

குழியிலிருந்து வெளியேறும் நீர் பொதுமக்கள் கடும் அதிருப்தி

Added : டிச 04, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து அதிகளவு நீர் வெளியேறி, புதிய ரோட்டையும் சேதப்படுத்துவதால், வாகன ஓட்டுனர்கள் சிரமப்படுகின்றனர்.பொள்ளாச்சியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம், 170.22 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் துவக்கம் முதல், திட்டமிடல் இல்லாமல் பணிகளை மேற்கொள்வதால், மக்கள் நரக வேதனைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில், பல இடங்களில், ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, 'நீர் ஊற்று' போல தண்ணீர் வெளியேறி வருகிறது. அதில், ராஜா மில் ரோட்டில், குழியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறுவதால், புதியதாக போடப்பட்ட ரோடும் சேதமடைந்துள்ளது.தொடர்ந்து வெளியேறும் தண்ணீர், கடைகள் முன் தேங்கியது. இதனால், சிலர் கால்வாய் போன்று வெட்டி, தண்ணீர் தேங்காமல் செல்ல, வழி ஏற்படுத்தியுள்ளனர். தண்ணீர் வெளியேறுவதை தடுத்து, ரோடு சேதமாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X