பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் இருக்கை இல்லை பயணிகள் தரையில் அமரும் அவலம்

Added : டிச 04, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, புது பஸ் ஸ்டாண்டில் போதிய இருக்கை வசதி இல்லாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சியில் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டுகள் பாலக்காடு ரோட்டில் எதிரெதிரே அமைந்துள்ளன. இதில், புது பஸ் ஸ்டாண்டில் கேரளா, வால்பாறை, கோட்டூர் வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் புதிய பஸ் ஸ்டாண்டில், பயணிகள் அமர போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை.இதனால், பயணிகள் அமர இடமின்றி நின்று கொண்டே, பஸ்சுக்கு காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. இதில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல், வேறு வழியின்றி பஸ் ஸ்டாண்டின் அழுக்கான தரையில் அமரும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால், சேறும், மண்ணுமான ஈரத்தரையில் முதியவர்கள் அமர்ந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது.பஸ் ஸ்டாண்டை நிர்வகிக்கும் நகராட்சி நிர்வாகம், பயணிகள் அமர, போதிய இருக்கை வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், இதை வலியுறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X