பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய தலைவர்கள்  பதவி ஒதுக்கீடு விபரம் வெளியீடு

Added : டிச 04, 2019
Advertisement

தேனி, :உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில் தலைவர் பதவி ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவி யார், யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் வெளியாகி உள்ளது.க.மயிலாடும்பாறை ஒன்றியம் -எஸ்.சி ., பெண், பெரியகுளம் ஒன்றியம் -எஸ்.சி. பொது, சின்னமனுார் ஒன்றியம்- பெண் பொது, உத்தமபாளையம் ஒன்றியம் - பெண் பொது, கம்பம் ஒன்றியம் -பெண் பொது, ஆண்டிபட்டி ஒன்றியம் - பொது, தேனி ஒன்றியம் -பொது, போடி ஒன்றியம் - பொது என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தேர்வு செய்யப்படும் 98 ஒன்றிய கவுன்சிலர்கள் மறை முக தேர்தல் மூலம் 8 ஒன்றிய தலைவரை தேர்வு செய்வார்கள். ஒன்றிய கவுன்சிலர்கள் அரசியல் கட்சி சின்னங்களிலும், சுயேச்சையாகவும் போட்டியிடுவார்கள். வெற்றி பெறும் கவுன்சிலர்களுக்கு கவனிப்பு பலமாக நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X