சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் மீது பஸ் மோதல்: மூவர் படுகாயம்

Added : டிச 04, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், முன்னால் சென்ற வேன் மீது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில், மூவர் காயமடைந்தனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 44, இவர் மயிலேறிபாளையம் பிரிவு பகுதியில், ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி கலைவாணி, 30, இவர்களுக்கு மூன்று வயதுள்ள சந்தோஷ் என்கிற ஆண் குழந்தை உள்ளது.நேற்று முன் தினம் காளிதாஸ் மாருதி வேனில் மனைவி, மகனுடன் பொள்ளாச்சி செல்வதற்காக, கிணத்துக்கடவு மேம்பாலத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றார்.அப்போது, பின்னால் வந்த தனியார் பஸ் வேகமாக வந்து, முன்னால் சென்ற மாருதி வேன் மீது மோதியதில், வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்தது.இவ்விபத்தில், காளிதாஸ், இவரது மனைவி கலைவாணி, மகன் சந்தோஷ் ஆகியோர் காயமடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து, தனியார் பஸ் டிரைவரான, கிணத்துக்கடவு அடுத்த தேவராயபுரம், சென்றாம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X