கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், நேற்று முன் தினம் கார்த்திகை மாத சோமாவாரத்தை ஒட்டி பிற்பகல் 3.30 மணிக்கு வேள்வி பூஜை நடந்தது. இதில், 108 சங்குகளில் தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்டது.வேள்வி பூஜை முடிந்ததும், சிவலோகநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இதில், பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், அபிேஷகம் செய்தனர். பின், 108 சங்கில் நிரப்பட்ட தண்ணீரை சிவலோகநாதருக்கு ஊற்றப்பட்டது.மேலும், வேள்வியில் வைக்கப்பட்ட தீர்த்த குடங்களில் இருந்த தண்ணீர் ஊற்றி அபிேஷகம் நிறைவு செய்யப்பட்டது. பின், இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சிவலோகநாதரை வழிப்பட்டனர். பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதேபோல் சிங்கராம்பாளையம் பிரிவு, எஸ்.எம்.பி., நகரில் உள்ள அன்னபூரணி சோற்றுத்துறை நாதர் கோவிலில் 108 சங்காபிேஷக பூஜை நடந்தது.