பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றிற்கு உயிர் கொடுத்த இளைஞர்கள்

Added : டிச 04, 2019
Advertisement

அருப்புக்கோட்டை:இன்றைய இளைஞர்களுக்கு தங்களுடைய பலம் தெரிவதில்லை.
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல பயனுள்ள காரியத்தை செய்யும் போதுதான் தங்கள் பலத்தை உணர்கின்றனர். இளைஞர்களை நம்பித்தான் நாடு உள்ளது. அதிக இளைய சமுதாயம்
வாழுகின்ற நாடு இந்தியா. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பயனுள்ள பணிகளை நாட்டிற்கு
செய்தால் நாடு வல்லரசாக மாறும்.

அந்த வகையில் அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லுாரை சேர்ந்த கிராம இளைஞர்கள் ஒன்று கூடி கிராமத்திற்கு நல்ல பயனுள்ள பணியை செய்துள்ளனர். கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக பயனற்று கிடந்த கிணற்றை துார் வாரி உயிர் கொடுக்க முடிவு செய்தனர். கிணற்றில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள்
கொட்டப்பட்டு பாழடைந்து கிடந்தது.

உள்ளூர் மற்றும் வெளியூரில் வேலை பார்க்கும் இக்கிராம இளைஞர்கள் கிணற்றை துார் வார ஆகும் செலவை ஏற்று கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்படி கிராம இளைஞர்கள் தங்கள் உடல் உழைப்பால் கிணற்றை துார் வாரி சுத்தப்படுத்தினர். தற்போது கிணற்றில் தண்ணீர் ஊறி 20 அடியில் நிற்கிறது. இதோடு குழாய்கள் மூலம் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் வரவும் ஏற்பாடு செய்துள்ளனர். ஊரில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்த்த இளைஞர்களைமக்கள் அனைவரும் பாராட்டினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X