பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வளர்ச்சி திட்டம் தமிழக அரசுக்கு கோரிக்கை

Added : டிச 04, 2019
Advertisement

வால்பாறை:கோவை மாவட்டம், வால்பாறை வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். தேசிய பூங்காவான அக்காமலை கிராஸ் ஹில்ஸ், தமிழகத்தின் சிரபுஞ்சி என்றழைக்கப்படும் சின்னக்கல்லார், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறுஅணை, பிரசித்தி பெற்ற கோவில்கள், நீர்வீழ்ச்சிகள், அரியவகை வனவிலங்குகள் சுற்றுலாபயணிகள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.இந்நிலையில், இந்த மாதம் முதல், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் கோவையிலிருந்து வால்பாறைக்கு சுற்றுலா வேன் இயக்கப்படவுள்ளது.வால்பாறை நகராட்சி சார்பில் தாவரவியல் பூங்கா, படகுசவாரி அமைக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கூறினார். அமைச்சர் அறிவித்தபடி, வால்பாறை நகரில் தாவரவியல் பூங்காவும், கீழ்நீராறு அணைகளில் படகு சவாரியும் துவங்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சி திட்டத்தை மேம்படுத்த, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, வால்பாறை மக்களின், பத்து ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X