பொது செய்தி

தமிழ்நாடு

கரிவரதராஜப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்

Added : டிச 04, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் கும்பாபிேஷக விழா, வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.பொள்ளாச்சி கடைவீதியில் பழமை வாய்ந்த கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்றுமுன்தினம் வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது. அதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நேற்று யாகசாலையில் முதல்கால யாக பூஜையும், மாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடந்தது.இன்று காலை, 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், வரும், நாளை (5ம் தேதி) காலையில் ஐந்தாம் காலம் மற்றும் மாலையில் ஆறாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, காலை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடு, காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிேஷகம், சாற்றுமுறை, தச தரிசனம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிேஷகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X