பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஸ்டேஷனில் தீராத குழப்பம்:இப்புடி பண்றீங்களே சார்...

Added : டிச 04, 2019
Advertisement
  ரயில்வே ஸ்டேஷனில் தீராத குழப்பம்:இப்புடி பண்றீங்களே சார்...

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வழங்கும் நடைமுறையில் நிலவும் குழப்பத்தால், ஊழியர்கள், பயணிகள் என இருதரப்பினருமே அவதிக்குள்ளாகின்றனர்.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் அகல ரயில் பாதை இயக்கத்துக்கு பிறகு முன்பதிவு கவுன்டர் காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது.பயணிகளின் பல ஆண்டு கோரிக்கைகளுக்கு பிறகு, கடந்த சில மாதங்களாக காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை முன்பதிவு டிக்கெட் கவுன்டர் செயல்படும் என, கோட்ட நிர்வாகம் அறிவித்தது.இதை செயல்படுத்தியதில் தான் கடுமையான குழப்பம் நிலவுகிறது. முன்பதிவுக்கான பிரத்யேக கவுன்டர், முன்பு போலவே மதியம், 2:00 மணிக்கு அடைக்கப்படுகிறது.அதன் பிறகு, பயணிகள் ரயில்களுக்கு சாதாரண டிக்கெட் வழங்கும் ஊழியர்கள், தங்களது வழக்கமான பணிகளுடன், முன்பதிவு டிக்கெட் வழங்குவது, டிக்கெட்டை ரத்து செய்வது ஆகிய கூடுதல் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.இதில், முன்பதிவு டிக்கெட் மற்றும் பயணிகள் ரயில் டிக்கெட் அச்சடிக்க தனித்தனி பிரிண்டர், தனித்தனி கம்ப்யூட்டர் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.ஒரே நேரத்தில் இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, டிக்கெட் வழங்கும் ஊழியர்கள், பயணிகள் என, இரு தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர்.மேலும், பயணிகள் ரயில் நேரத்தில் சாதாரண டிக்கெட் வழங்கும் போது, முன்பதிவு டிக்கெட் வழங்க முடிவதில்லை. இதனால், முன்பதிவு டிக்கெட்டுக்காக வரும் பயணிகள், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.பயணிகள், ஊழியர்கள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.அன்றாடம் நடக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.பல ஆண்டுகளாக, சாதாரண டிக்கெட் மட்டுமே வழங்கி வந்த ஊழியர்களுக்கு, முன்பதிவு டிக்கெட் வழங்குவது, ரத்து செய்வது குறித்து முறையான பயிற்சியும் வழங்கப்படவில்லை.இப்படி, பணிச்சுமை, பயணிகளுடன் வாக்குவாதம், பணியில் குழப்பம் என, பன்முனை தாக்குதலுக்கு ஆளாகும் ஊழியர்கள், நிம்மதியிழந்து தவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே, பயணிகள், ஊழியர்கள் இருதரப்பினரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.தீர்வு என்ன?தற்போது முன்பதிவு கவுன்டர் ஊழியர்கள், காலை, 8:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை ஆறு மணி நேரம் மட்டுமே பணியாற்றுகின்றனர். பணி நேரத்தை எட்டு மணி நேரமாக அதிகரிப்பதன் மூலம், பிரத்யேக கவுன்டர் நேரத்தை மாலை, 4:00 மணி வரை நீட்டிக்கலாம். அல்லது, இன்னொரு ஷிப்டுக்கு ஊழியர் நியமிப்பதன் மூலம், குழப்பங்களுக்கு தீர்வு காணலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X