பொது செய்தி

தமிழ்நாடு

பட்டம் வினாடி வினா போட்டி: மாணவர்கள் அசத்தல்

Added : டிச 04, 2019
Advertisement

பொள்ளாச்சி:'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி வினா போட்டியில், மாணவர்கள் அறிவுத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.'தினமலர்', கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, 'பதில்சொல், அமெரிக்கா செல்' என்ற தலைப்பில் மெகா வினாடி வினா போட்டி, பொள்ளாச்சி ஜோதிநகர் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 300 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, பள்ளி முதல்வர்கள் பத்மஜா, ஜெயலட்சுமி முன்னிலையில் காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது. மூன்று சுற்றுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் உடனுக்குடன் பதில் அளித்தனர். மேலும் குழுவாக பிரிந்த மாணவர்கள் அறிவுத்திறமை வெளிப்படுத்தி அசத்தினர். அதில், 'எச்' அணியை சேர்ந்த ஸ்ரீஹரிணி, அவந்திகா ஆகியோர் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.பள்ளி இயக்குனர் சுஜரிதா, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தார். அதில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.ஆதித்யா வித்யா மந்திர் பள்ளிபொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி ஸ்ரீ ஆதித்யா வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் வினாடி வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றுக்கான போட்டியில், 110 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மதிப்பெண்கள் அதிகம் எடுத்து, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு காலிறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'சி' அணியை சேர்ந்த நந்தினி ஜெயஸ்ரீ, நேத்ரா வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டியை, ஆசிரியை சண்முகப்பிரியா ஒருங்கிணைத்தார்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைவர் கந்தசாமி, துணை முதல்வர் சூரிய பிரபா, ஆசிரியைகள் நிரஞ்சனா தேவி, ஜெகதாம்பிகை ஆகியோர் பாராட்டு சான்றிதழ், பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X