மேற்கு தொடர்ச்சி மலையில் மழை புலிகள் கணக்கெடுப்பில் தாமதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை புலிகள் கணக்கெடுப்பில் தாமதம்

Added : டிச 04, 2019
Share
ஸ்ரீவில்லிபுத்துார்:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் தேசிய புலிகள் கணக்கெடுப்பு முதல்கட்ட பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த நவம்பரில் துவங்க திட்டமிடபட்டிருந்தது. இதற்காக வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வ ஆர்வலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவில்லிபுத்துாரில்

ஸ்ரீவில்லிபுத்துார்:மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழையால் தேசிய புலிகள் கணக்கெடுப்பு முதல்கட்ட பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தேசிய அளவிலான புலிகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த நவம்பரில் துவங்க திட்டமிடபட்டிருந்தது. இதற்காக வனத்துறை அலுவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், தன்னார்வ ஆர்வலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்தது.

இதையடுத்து வனப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி துவங்கயிருந்த நிலையில் மலையில் கனமழை பெய்வதால் கணக்கெடுப்பின் அடிப்படை பணிகள்
மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தேசிய புலிகள் கணக்கெடுப்பு பணி தாமதமாகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X