விருதுநகர்:விருதுநகர்
4ம் வகுப்பு மாணவி முஜிதா சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து
8:02 நிமிடம் கண்டபெருண்டாசன யோகா செய்து உலக சாதனை செய்தார்.
விருதுநகர் அருகே செவல்பட்டி தாமு மெமோரியல் மெட்ரிக்., பள்ளி 4ம் வகுப்பு மாணவி முஜிதா.
இவர் ஒரு அடி அகலம் 21 இன்ச் நீளம் கொண்ட சிறிய மீன் தொட்டிக்குள் அமர்ந்து தனது இரு
கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து முகத்திற்கு முன் பகுதி கொண்டு வந்து 8:02
நிமிடங்கள் கண்டபெருண்ட ஆசனம் செய்து உலக சாதனை படைத்தார்.இதே
ஆசனத்தை இதற்கு முன் சீனாவை சேர்ந்த ஒருவர் மூன்று நிமிடங்கள்
செய்தது சாதனையாக இருந்தது . இதை மாணவி முஜிதா
முறியடித்துள்ளார்.இச்சாதனை நோபிள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE