பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் குலை நோய் கட்டுப்படுத்த எளிய வழி

Added : டிச 04, 2019
Advertisement

ராஜபாளையம்:மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் சுப்பையா செய்தி குறிப்பு: தொடர் மழை, துாறல், அதிக தழைச்சத்தினாலும் நெல் குலை நோய் தாக்குதல் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
பயிரின் அனைத்து பகுதிகளும் இலைகள், தண்டு, கணுப்பகுதி, கழுத்துப் பகுதி, கதிர் ஆகியவற்றில் பூசணத்தால் தாக்கப்பட்டிருக்கும்.இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்களுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும்.

பல புள்ளிகள்ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்களை உருவாக்கும். தீவிர தாக்குதலின் போது பயிர் முழுவதும் எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். இவற்றை கட்டுப்படுத்த, வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும்

வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி., அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லதுடிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். சூடோமோனாஸ் புளோரோசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சாண கொல்லியை 0.5சதவிகிதம் என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும்

அதிக அளவு தழை சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். சூடோமோனாஸ் வேளாண்மை
விரிவாக்கம் மையத்தில் உள்ளது. இதை வாங்கி விவசாயிகள் பயனடைய வேண்டும் என,கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X