கம்பம்:கம்பத்திற்காக பணிகள் முடிந்துள்ள ரூ. 18.90 கோடி குடிநீர் திட்டத்திற்கு, மாத பராமரிப்பு கட்டணமாக ரூ. 18 லட்சத்தை வாரியம் கேட்டதற்கு நகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
கம்பம் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் லோயர்கேம்பில் உள்ள வாரியத்தின் பம்பிங் ஸ்டேஷனிலிருந்து கிடைக்கிறது. அது பற்றாக்குறையாக இருப்பதால் சுருளிப்பட்டி ரோட்டில் உறைகிணறு அமைத்து விநியோகத்தை கூடுதலாகசெய்து வருகிறது. இந்நிலையில் நகராட்சிக்கென தயாரிக்கப்பட்டு ரூ. 18.90 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் முடிவடைந்து ஓராண்டிற்கும் மேலாகி விட்டது.
அதனை முழுமையாக ஒப்படைக்க நகராட்சியும், பராமரிப்பை நாங்கள் தான் மேற்கொள்வோம் என்றுவாரியமும் அடம் பிடித்து வருகின்றன.இந்நிலையில் மாத பராமரிப்பு கட்டணமாக ரூ. 18 லட்சம் தர வேண்டும் என்று வாரியம்விடுத்த வேண்டுகோளை, நகராட்சி நிராகரித்துஉள்ளது. பம்பிங் ஸ்டேஷனில் இரண்டு 75 குதிரைசக்தி கொண்ட மோட்டர்களில், ஒன்று மட்டுமே 24 மணிநேரமும் செயல்படுகிறது.
அதன்படி ஒரு மாதத்திற்கு ரூ. 2.5 லட்சம் மட்டுமே மின்கட்டணம் செலுத்தவேண்டி வரும். பராமரிப்பு, இதர செலவுகள் சேர்த்து ரூ. 4 லட்சம் வரைஆகும். அதை விடுத்து மாதத்திற்கு ரூ. 18 லட்சம் என்று கேட் பது நியாயமா என நகராட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நகராட்சிகளின் இயக்குநரிடம் ஆலோசனை செய்ய, பொறியாளர் செல்வராணி தலைமையிலான நகராட்சி பணியாளர்கள் குழு, சென்னையில் முகாமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE