சிதம்பரம் ஜாமின் மனு: இன்று தீர்ப்பு

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற, அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் உச்ச
சிதம்பரம் ஜாமின் மனு: இன்று தீர்ப்பு

புதுடில்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற, அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.


latest tamil news


ஆனால் அதே வழக்கில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை கைதுசெய்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி,ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை நவ. 28ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
10-டிச-201918:44:18 IST Report Abuse
kowsik Rishi பொழச்சு போட்டும் என்று விட்டீருப்பார்கள் மு.கருணாநிதி கூட்டத்தை போலெ நாம் என்ன அவ்வளவு கொடியவர்களா ? கணம் கோர்ட்டு இவரை பேசாமல் இருக்க சொல்லுங்கள்
Rate this:
Cancel
04-டிச-201911:05:35 IST Report Abuse
மும்பை நாநா நூறு நாள் ட்ரீட்மெண்ட் முடிஞ்சு போச்சு
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
04-டிச-201910:51:14 IST Report Abuse
Natarajan Ramanathan இவனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி பெற்ற பானுமதி முன்பு இவனது ஜாமீன் வழக்கு வந்தால் கண்டிப்பாக கிடைத்துவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X