ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமின்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (120+ 24)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரததிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.






ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெற, அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் அதே வழக்கில் பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை கைதுசெய்தனர்.இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி,ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை நவ. 28ல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.




இதில், சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், இவ்வழக்கு தொடர்பாக சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் சிதம்பரத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு சிதம்பரம் வெளியே வர உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (120+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
06-டிச-201913:42:53 IST Report Abuse
மூல பத்திரம் ஆனால் பாதி கொட்டம் அடங்கி இருக்கும், உள்ளே போட முடியாது என்று நினைத்தவர்களை சற்று மாற்றியிருக்கும், வெளியில் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் தான் பேசுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
04-டிச-201920:13:34 IST Report Abuse
Ganesan.N இரண்டு லட்சம் ஜாமீன் , கோடிக்கணக்கான கொள்ளைக்கு. இந்த நாடு எங்கே போகிறது. இங்கே காசு உள்ளவனுக்கு ஒரு சட்டம். காசு இல்லாதவனுக்கு ஒரு சட்டம். நீதி எங்கே போகிறது.
Rate this:
Share this comment
Cancel
Karthikeyan - Madurai,இந்தியா
04-டிச-201919:50:06 IST Report Abuse
Karthikeyan அய்யா.. கருத்து கனவான்களே.. சிதம்பரம் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததை என்னவோ பெரிய தவறை போல கண்டமேனிக்கு கருத்து போடுறீங்களே.. முதல்ல ஒன்னு தெரிஞ்சிக்கோங்க .. அவரு வெறும் விசாரணை குற்றவாளி தான்.. அவர்மீதான குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.. கொலை செஞ்சவன் குற்றம் நிரூபிக்கப்பட்டவன் எல்லாம் கொஞ்ச நாளில் ஜாமீனில் வெளியே வரான்.. ஊழல் செஞ்சவன் கட்சி மாறி ஒரே நாளில் நிரபராதி ஆகுறான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X