உள்ளாட்சி தேர்தலை ரத்துசெய்யக் கோரி திமுக புதிய மனு| Dinamalar

உள்ளாட்சி தேர்தலை ரத்துசெய்யக் கோரி திமுக புதிய மனு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (3)
Share
DMK, SupremeCourt, Petition, LocalBodyElection, திமுக, சுப்ரீம்கோர்ட், உள்ளாட்சி, தேர்தல், மனு

புதுடில்லி: கிராம ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச., 27, 30 தேதிகளில் இருகட்டங்களாக நடத்தப்படுவதாக தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு முன்னதாக வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கை முறைகளை நிறைவேற்ற தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதன் விசாரணை நாளை (டிச.,05) விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை பணிகள் நிறைவடைந்த பின் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும். அதுவரையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என திமுக புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X