மாடியிலிருந்து விழுந்த குழந்தை: காப்பாற்றிய பொதுமக்கள்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (2)
Advertisement
குழந்தை, மாடி, பொது மக்கள்

ஆமதாபாத் : டையு டாமனில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையை, அங்கு நின்றவர்கள் பத்திரமாக பிடித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

டையு - டாமனில் உள்ள குடியிருப்பு ஒன்றின் 3வது மாடியில் விளையாடி கொண்டிருந்த, முகமது ஜமால் என்ற 2 வயது குழந்தை திடீரென தடுமாறுவதை கீழே நின்றவர்கள் கண்டுபிடித்தனர். மேலும், அக்குழந்தை கீழே விழக்கூடிய அபாயத்தையும் கணித்து உஷாரானார்கள். அப்போது, அந்த குழந்தை 3வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தது. உடனடியாக அக்குழந்தையை பிடித்து காப்பாற்றினர். இந்த காட்சிகள், பதிவாகியிருந்தன. இது வேகமாக பரவ துவங்கியது. உடனடியாக, அக்குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதனையில், குழந்தைக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக குழந்தையின் தாத்தா கூறுகையில், குழந்தையை காப்பாற்றியதற்காக கடவுளுக்கும், குழந்தையை பிடித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். நான் வீட்டில் இல்லாத போது நடந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்தே அனைவருக்கும் தெரியவந்தது. இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga - Muscat,ஓமன்
05-டிச-201919:51:29 IST Report Abuse
Naga காப்பாற்றின மனிதனேயமிக்க இவர்களை வணங்குகிறேண்.
Rate this:
Share this comment
Cancel
Sivak - Chennai,இந்தியா
04-டிச-201913:45:46 IST Report Abuse
Sivak வாழ்த்துக்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X