பொது செய்தி

இந்தியா

760 பேருக்கு 1 போலீஸ்: தெலுங்கானாவில் அவலம்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (4)
Advertisement
Telangana, Police, VIP, தெலுங்கானா, போலீஸ், விஐபி, மக்கள், பற்றாக்குறை

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு விஐபி.,க்கு 14 போலீசாரும், 760 மக்களுக்கு 1 போலீஸ் மட்டுமே இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் கால்நடை பெண் டாக்டர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பெண் டாக்டர் காணாமல் போனதும் அவரது பெற்றோர் புகார் அளித்தும் எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போலீசார் தாமதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதில் 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீசார் துரிதமாக செயல்படவில்லை எனவும், தெலுங்கானாவில் போலீசின் நிலை குறித்தும் நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது.




இது தொடர்பான, காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு சராசரியாக 193 போலீசார் என்ற ரீதியில் இருந்தாலும், தெலுங்கானா மாநிலத்தில் 131 போலீசார் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் ஒரு போலீசார் 2.5 சதுர கி.மீ., தூரத்திற்கு கண்காணிக்கும் அவலத்தில் உள்ளனர். அதேநேரத்தில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 300 விஐபி.,க்களுக்கு மொத்தம் 4000 போலீசார் பாதுகாப்பில் இருக்கின்றனர். அதன்படி ஒவ்வொரு விஐபி.,க்கும் சராசரியாக 13 முதல் 14 போலீசார் பாதுகாப்பில் இருக்கின்றனர்.




தெலுங்கானாவில் போலீசார்களின் பற்றாக்குறையால் தான் மக்களின் பாதுகாப்பில் சுணக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை போக்குவதற்காக 18,000 புதிய போலீசார்களை பணியமர்த்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதாகவும், டிஜிபி மகேந்தர் ரெட்டி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-டிச-201906:09:41 IST Report Abuse
 nicolethomson இதுல பாதி இந்த அரசியல்வாதிகளுக்கு உதவ போயிட்டாங்க அப்போ கணக்கு ?
Rate this:
Share this comment
Cancel
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
04-டிச-201919:46:43 IST Report Abuse
Kadambur Srinivasan தமிழ்நாடு 732 பேருக்கு ஒரு போலீஸ்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
04-டிச-201918:53:52 IST Report Abuse
Tamilan எதையாவது காரணம் காட்டி தப்பிக்கவேண்டியதுதான் . இப்போதுள்ள அரசியல் சட்ட செட்டப்பில் இதையெல்லாம் தடுக்க முடியாது . பழைய முறைகளையும் கெடுத்து புதிய அரசியல் சட்ட முறைகளையும் முழுமையாக, ஒழுங்காக அமல்படுத்தாமல் இதையெல்லாம் தடுக்க முடியாது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X