பொது செய்தி

தமிழ்நாடு

தருமபுரம் ஆதீனம் முக்தி அடைந்தார்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
தருமபுரம் ஆதீனம் ,பரிபூரணம் அடைந்தார்

மயிலாடுதுறை : நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆதீன மடத்தின் மடாதிபதி 26-வது குருமகா சந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் இன்று (டிச.,4) பிற்பகல் தனது 93 வயதில் முக்தியடைந்தார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி பரிபூரணம் அடைந்தார்.

1926ம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிறுகாட்டூரில் பிறந்த இவர், விருத்தாசலம் தேவாரப் பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்ற இவர், கவுரவ பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தேவஸ்தான பொறுப்பில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர், கட்டளைத்தம்பிரான் சுவாமியாக சென்னை சமய பிரச்சார நிலையத்தில் பணியாற்றி வந்தார். 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் தருமபுர ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்றார். 49 ஆண்டுகள் மடாதிபதியாக பதவி வகித்த இவர், வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக, திருக்கடையூர், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,இந்தியா
04-டிச-201919:02:21 IST Report Abuse
 N.Purushothaman ஆன்மீக கடமை செய்த ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாக பிரார்த்தனைகள் ....
Rate this:
Cancel
hari - Hosur,இந்தியா
04-டிச-201917:23:54 IST Report Abuse
hari குருநாதர் திருவருள்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
04-டிச-201917:12:59 IST Report Abuse
இந்தியன் kumar எல்லாம் இறைவன் செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X