மணமகளாக சீனர்களுக்கு விற்கப்பட்ட பாகிஸ்தான் பெண்கள்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (49)
Advertisement
பாகிஸ்தான், பெண்கள், சீனர்கள், கடத்தல், விற்பனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள் 629 பேர் திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளதும், அவர்கள் சீனாவுக்கு அழைத்து செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 2018 முதல் இவ்வாறு பாகிஸ்தான் பெண்கள் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. ஆனால், அதிகாரிகளின் விசாரணைக்கு பாதியிலேயே தடை விதிக்கப்பட்டது. சீனாவுடனான உறவு பாதிக்கப்படும் என்பதால், திருமணத்திற்காக பெண்கள் விற்கப்படும் விஷயத்தை விசாரிப்பதற்கு உயரதிகாரிகள் தடை விதித்தனர்.
இதனால், அக்டோபர் மாதம், பெண்கள் விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 31 சீனர்களை பாகிஸ்தான் கோர்ட் விடுதலை செய்தது. இந்த வழக்கில், தொடர்புடைய பெண்களுக்கு மிரட்டல் விடப்பட்டன. சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டது. அவர்கள் விசாரணையின் போது கூறிய தகவல்களை போலீசார் உறுதிப்படுத்தவில்லை என பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவிற்கு விற்கப்பட்ட பெண்களை மீட்டு வருவதில் முக்கிய பங்காற்றிய சலீம் இக்பால் என்பவர் கூறுகையில், விசாரணை அதிகாரிகளுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுக்க துவங்கினர். சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அரசிடம் இது குறித்து எடுத்து கூறினோம். ஆனால், அரசு கவனம் செலுத்தவில்லை என்றனர். இது குறித்து பாகிஸ்தான்உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், விசாரணை நடவடிக்கைகள் , உயர் அதிகாரிகள் நெருக்கடி காரணமாக குறைக்கப்பட்டன. அதிகாரிகள் மிரட்டப்பட்டனர். செய்திகளை வெளியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. பெண்கள் கடத்தப்படுவதும், விற்கப்படுவதும் அதிகரித்துள்ளது.
இதில் தொடர்புடையவர்கள், வழக்கில் இருந்து தப்பித்து விடுவோம் என உறுதியாக நம்புகின்றனர். அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை. விசாரணை நடத்தக்கூடாது எனநெருக்கடி கொடுப்பதால், பெண்கள் கடத்தப்படுவது அதிகரிக்கிறது எனக்கூறிய அவர்கள், தங்களது பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிடக்கூடாது எனக்கூறினர். இதற்கு, நாங்கள் நாங்களாக வாழ வேண்டும். மனிதநேயம் என்பது இங்கு இல்லை என்கின்றனர்.

பாகிஸ்தான் பெண்களை கடத்தி வருவது தங்களுக்கு தெரியாது எனக்கூறும் சீன வெளியுறவு அமைச்சகம், சீனா மற்றும் பாகிஸ்தான் மக்கள், விருப்பப்பட்டு தங்களுக்கு இடையே உறவு ஏற்படுத்தி கொண்டால், அதனை வரவேற்கிறோம். அதேநேரத்தில், சட்டவிரோதமான திருமண நடவடிக்கைகளை ஆதரிக்க முடியாது என தெரிவித்தது.


பாகிஸ்தானில் இருந்து திருமணத்திற்காக விற்கப்பட்ட 629 பெண்களின் அடையாளங்கள், ஆவணங்களின் பதிவுகளை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். அதில், அந்த பெண்களின் தேசிய பதிவெண், சீன கணவர்களின் பெயர்கள், திருமண தேததி ஆகியவை இடம்பெற்றுள்ளன. கடந்த 2018 முதல் ஏப்ரல் 2019 வரை திருமணம் நடந்துள்ளது. அனைத்து இளம்பெண்களும், குடும்பத்தினரால் விற்கப்பட்டது தெரியவந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானிய அதிகாரிகள் ஏபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், சீன மற்றும் பாகிஸ்தானிய இடைத்தரகர்கள், மணமகனிடம் இருந்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 40 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வாங்குகின்றனர். ஆனால், மணமகள் குடும்பத்திற்கு 2 லட்சம் மட்டுமே வழங்குகின்றனர். சீனாவிற்கு விற்கப்படும் பெண்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு கட்டாய கருவுறுதல் பரிசோதனை மற்றும் உடல் ரீதியிலும் பாலியல் ரீதியிலும் துன்புறுத்தல் நடந்ததும், சில பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது என்றார்.


விசாரணை அதிகாரிகள், 'போலி சீன திருமண வழக்குகள்' என்ற தலைப்பில் அறிக்கை தயாரித்து பிரதமர் இம்ரான் கானிடம் வழங்கினர். இந்த அறிக்கையில், பெண்கள் விற்கப்படுவது தொடர்பாக52 சீனர்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 31 சீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக திருமணம் நடத்தி வைக்கும் இரண்டு இடங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஏழை முஸ்லிம்களை குறிவைத்து இடைத்தரகர்கள் செயல்படுவது தெரியவந்தது. இதில் தொடர்புடைய முஸ்லிம் மத குரு ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 31 சீனர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 21 சீனர்கள் மீதான வழக்கு பல கோர்ட்களில் நிலுவையில் உள்ளது. ஆனால், இந்த வழக்குகளில் ஜாமின் கிடைத்ததும் சீனர்கள், அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
06-டிச-201919:04:36 IST Report Abuse
மூல பத்திரம் நம்ம திராவிஷர்கள் ஒரு அறிக்கையும் விடவில்லையே. சிரியா துருக்கி எகிப்து போன்ற இடங்களில் நடக்கும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சிறுபான்மை இளம் பெண்கள் விற்க படுவது குறித்து ஏன் மௌனம். இங்குள்ள சிறுபான்மையினர் அதிலும் குறிப்பாக பெண்கள் உங்கள் இந்துமதத்திலுள்ள திராவிஷர்களை அடையாளம் தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் ஆடும் நாடகம் உங்கள் ஓட்டுக்காக மட்டும் தான் என்று
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
05-டிச-201910:01:36 IST Report Abuse
Krishna Marrying Foreign Girls Cannot be a Crime At All (Except for Case-Hungry, News-Hungry Anti-Socials & Anti-Men Fanaticists Who will Cook up Cases for Making it Sensational News). It Happens all over the world due to Shortages of Girls (due to murders by Criminal Women But Never Put in Media, Never Investigated, Never Prosecuted & Never Punished) Local free-reckless Girls becoming Arrogant 9incresaing Divorce-Maintenance cases are Proofs). Indian Men too are Ready to Marry Foreign girls esp. Conservative & Poor Girls
Rate this:
Share this comment
Cancel
RADE - loch ness,யுனைடெட் கிங்டம்
05-டிச-201909:41:18 IST Report Abuse
RADE மலாலா என்ன பண்ணறீங்க?
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
05-டிச-201911:54:40 IST Report Abuse
TamilArasanஇதுக்கு பயந்துதான் லண்டனில் ஒளிந்துள்ளது ஆனால் அங்கு இருந்து இந்தியாவிற்கு எதிராய் அறிக்கைவிடும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X