
திருநங்கைகளை கவுரப்படுத்தும் விதமாக அவ்வப்போது சில நிகழ்கள் நடக்கின்றன அப்படி ஒரு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.

திருநங்கைகளுக்கான சமூக அமைப்பும்,அழகு கலை நிபுணர் அமைப்பும் இணைந்து சென்னையில் மணப்பெண் அலங்கார அணிவகுப்பினை திருநங்கைகளை வைத்து நடத்தினர்.

இந்த அணிவகுப்பில் 29 மாநிலங்களைச் சேர்ந்த 29 திருநங்கைகள் கலந்துகொண்டனர்.‛மங்கையும் நங்கையும்' என்ற தலைப்பில் நடந்த இந்த அணிவகுப்பில் அந்தந்த மாநிலத்தைச் சார்ந்த திருநங்கைகள் அந்தந்த மாநில மணப்பெண் அலங்காரத்தில் அணிவகுத்து வந்தனர், பார்வையாளர்கள் திரளாக கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.

திருநங்கைகள் இப்போது காவல் துறையிலும், கல்வித்துறையிலும், சட்டத்துறையிலும் நுழைந்து சாதித்துவருகின்றனர் அந்த வரிசையில் பேஷன் அலங்காரத்திலும் இப்போது கலந்து கொண்டுள்ளனர் இது அவர்களுக்குள் நிறைந்த தன்னம்பிக்கையை தரும் என்று நிகழ்ச்சியை நடத்திய அமைப்பினர் தெரிவித்தனர்.


----_-எல்.முரு கராஜ்
murugaraj@dinamalar.in