பொது செய்தி

இந்தியா

பெண்களுக்கு இலவச பாதுகாப்பு சவாரி திட்டம்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
Nagpur, இலவச சவாரி திட்டம், பெண்கள்,நாக்பூர், போலீஸ், பாதுகாப்பு, டுவிட்,

நாக்பூர் : நாக்பூரில் இரவில் தனியாக பயணம் செய்யும் பெண்களை பாதுகாப்புடன் அழைத்து சென்று அவர்களின் வீட்டில் சேர்க்கும் புதிய திட்டத்தை நாக்பூர் போலீசார் துவக்கியுள்ளனர்.

மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று (டிச.,4) இலவச சவாரி திட்டம் ( free ride scheme ) என்ற புதிய திட்டத்தை நாக்பூர் நகர போலீசார் அறிவித்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவி செய்வதே இதன் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் படி நாக்பூரில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை, தனியாக செல்ல தவிக்கும் எந்தவொரு பெண்ணும் 100 அல்லது 1091 அல்லது 07122561103 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஒரு போலீசாரிடம் உதவி கோரலாம்.
கட்டுப்பாட்டு அறை வாகனம் அல்லது அருகிலுள்ள பி.சி.ஆர் வாகனம் / எஸ்.எச்.ஓ வாகனம் பெண்களை அழைத்துச் சென்று அவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று அவர்கள் வீட்டில் சேர்க்கப்படும் என்று போலீசார் டுவிட் செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-டிச-201920:23:21 IST Report Abuse
ஆப்பு ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். புடிபட்ட ஆளுங்களை ஒரு வாரத்தில் விசாரிச்சு தூக்குல போடுங்க. பெண்களின் பாதுகாப்புக்கு நான் கேரண்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X