சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி: சிதம்பரம்

Updated : டிச 04, 2019 | Added : டிச 04, 2019 | கருத்துகள் (16+ 150)
Advertisement
106 days, chidambaram,Supreme Court,bail,INX_Media_case,சிதம்பரம், சுப்ரீம் கோர்ட், உச்சநீதிமன்றம், சிபிஐ, அமலாக்கத்துறை, ஐ.என்.எக்ஸ்.,

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்., கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம், ஜாமின் கிடைத்து சிறையிலிருந்து வெளிவந்தபின், 'சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' எனத் தெரிவித்தார்.


கைது:


ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், வெளிநாட்டில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு பெற்றது. இதற்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, கடந்த ஆகஸ்ட் 21ல், சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். பின், அவர் டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கியது.


ஜாமின்:


ஆனால், அதே வழக்கில், பணப் பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையினர், சிதம்பரத்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கில், சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.


உத்தரவு:


மேலும் உத்தரவில், 'இவ்வழக்கு தொடர்பாக சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரூ.2 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்த வேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைக்க வேண்டும்' என நீதிபதிகள் தெரிவித்தனர்.






106 நாள் சிறைவாசம்:


இதனையடுத்து சிறை நடைமுறைக்கு பின், இன்று இரவு சுமார் 8.10 மணி அளவில், திகார் சிறையிலிருந்து சிதம்பரம் வெளியே வந்தார். 106 நாள் சிறைவாசத்துக்கு பின் வெளியே வந்த சிதம்பரத்துக்கு, சிறையின் வெளியே காங்., தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த சிதம்பரம் கூறுகையில், 106 நாட்களுக்குப்பின் சுதந்திர காற்றை சுவாசிக்கிறேன். நாளை(டிச.,5) செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 150)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-டிச-201913:03:15 IST Report Abuse
Malick Raja அடிப்படை ஆதாரமில்லாமல் அடிப்படை அறிவற்ற அறிவிலிகளால் தொடரப்பட்ட வழக்கு என்பது உண்மை .. இது மேலும் தொடர்வது சட்டவிதிகளை மீறுவதாகி விடும் என்ற நிலையில் நீதிமன்றம் ஜாமீன் என்ற பெயரில் விடுவித்தது மனிதமாண்புக்கு உகந்த ஒன்றேயாகும்
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
04-டிச-201923:21:46 IST Report Abuse
konanki யோக்கியன் வெளியே .சொம்பு பத்திரம்
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
04-டிச-201922:45:18 IST Report Abuse
Allah Daniel நேத்துவரா....ஏமாளி...ஏமாளி...ஏமாளி...நேத்துவரா....ஏமாளி...ஏமாளி...ஏமாளி...இன்றுமுதல் கோமாளி... கோமாளி ... கோமாளி ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X