சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'செல்லாக்காசாகிடுவோம்ன்னு பயம் போல!'

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'செல்லாக்காசாகிடுவோம்ன்னு பயம் போல!'

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலர் தினகரன், தேவகோட்டைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும். தேர்தலில், இடஒதுக்கீடு சரியாக இல்லாததால் தானே, தி.மு.க.,வினர் நீதிமன்றத்திற்குப் போகின்றனர்; நிறுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை.

தி.மு.க.விற்கு ஆதரவாக பேசவில்லை. இவர்களை அப்படி போக வைத்து, காலம் தாழ்த்த வேண்டும் என, ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். 'தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். அதற்கு தான் தலைவர் பதவிக்கு, மறைமுக தேர்தல், புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்டங்கள் பிரிப்பும், முறையாக செய்யப்படவில்லை. ரஜினி மட்டுமல்ல, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். வெற்றிடம் இருப்பது உண்மை தான்' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'தான் செல்லாக்காசாகி விடுவோம்ன்னு, எவ்ளோ பயம் பாருங்க... ரஜினிக்கு, 'ஜிங்சாக்' கொட்டினால், அவராவது தன்னை கூட்டணியில சேர்த்துப்பார்ன்னு நினைக்கிறார் போல...' எனக் கிண்டலடிக்க, மற்ற நிருபர்கள், ஆமோதிப்பது போல் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-டிச-201906:22:55 IST Report Abuse
D.Ambujavalli உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடுவதில் இரு கட்சிகளுமே ‘ரகசிய கூட்டணி ‘ வைத்திருக்கின்றனர். இல்லாவிட்டால் புது மாவட்டங்களை உ. ஆ. தேர்தலுக்குப் பின் வைத்தால் என்ன குடி முழுகிவிடும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X