சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மரண பயம்!

Added : டிச 04, 2019
Share
Advertisement
'என்னை சுற்றி என்னவோ நடக்குது; இதற்கு பின்னணி யார் என்று தான் தெரியவில்லை' என, முணுமுணுக்கிறார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி. கடந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடித்த ஜெகன், 'இன்னும் சில ஆண்டுகளுக்கு, என்னை யாரும் அசைக்க முடியாது' என, கூறி வந்தார். மக்கள் பிரச்னைக்காக
 மரண பயம்!

'என்னை சுற்றி என்னவோ நடக்குது; இதற்கு பின்னணி யார் என்று தான் தெரியவில்லை' என, முணுமுணுக்கிறார், ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.

கடந்த சட்டசபை தேர்தலில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்து, ஆட்சியை பிடித்த ஜெகன், 'இன்னும் சில ஆண்டுகளுக்கு, என்னை யாரும் அசைக்க முடியாது' என, கூறி வந்தார். மக்கள் பிரச்னைக்காக போராட்டம் நடத்திய சந்திரபாபு நாயுடுவை, அதிரடியாக வீட்டுக் காவலில் வைத்து, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்.

இந்த மகிழ்ச்சி ரொம்ப நாள் நீடிக்கவில்லை. பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், மாநிலம் முழுவதும், ஜெகன்மோகன் அரசை கண்டித்து, போராட்டங்களை நடத்தி வருகிறார். 'ஜெகன்மோகன் ரெட்டி அரசு பதவியேற்ற, இந்த ஆறு மாதங்களில், மாநிலத்தில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து விட்டது. விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி அதிகரித்து விட்டது.

இதற்கு தீர்வு காண வேண்டிய முதல்வரோ, எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்' என, ஆந்திரா முழுவதும் ஆவேசமாக பேசி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம், மக்கள் அவருக்கு அமோக ஆதரவு அளிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். 'சந்திரபாபு நாயுடுவையே அடக்கிய நமக்கு, இந்த பவன் கல்யாண், மரண பயத்தை காட்டுகிறாரே... என்ன செய்யலாம்...' என, தீவிரமாக யோசித்து வருகிறார், ஜெகன்மோகன் ரெட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X