இதே நாளில் அன்று

Added : டிச 04, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

டிசம்பர் 5, 2016

ஜெ.ஜெயலலிதா: கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில், ஜெயராமன் - - சந்தியா தம்பதிக்கு மகளாக, 1948 பிப்., 24ல் பிறந்தார்; தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, பல்வேறு மொழிகளில், 115 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆரால், அரசியலுக்குள் அழைத்து வரப்பட்ட இவர், அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலரானார்; ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்தார்.

எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச் செயலரானார்; ஆறு முறை முதல்வராக இருந்தவர். இவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது, சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது; அதில், குற்றவாளிகள் என, தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து, ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். 2015, மே 11ல், அவர்களை விடுவித்தது, கர்நாடக உயர் நீதிமன்றம்.

விடுதலையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. 2017 பிப்., 14ல், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என, தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன்பே, 2016 டிச., 5ல் காலமானார்.

அவர் இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X