டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (1)
Share
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மேட்டுப்பாளையத்தில், பிரமாண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியான, 17 பேரின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு, அரசு வேலையை, தமிழக முதல்வர் வழங்க வேண்டும். 'டவுட்' தனபாலு: விபத்தில் உயிர் பலி சோகமானது தான். எனினும், விபத்துகளில் பலியாகும் நபர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலை வழங்கினால், அரசு திவாலாகி விடாதா? ஏற்கனவே, தமிழக அரசு
 'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: மேட்டுப்பாளையத்தில், பிரமாண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பலியான, 17 பேரின் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு, அரசு வேலையை, தமிழக முதல்வர் வழங்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: விபத்தில் உயிர் பலி சோகமானது தான். எனினும், விபத்துகளில் பலியாகும் நபர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலை வழங்கினால், அரசு திவாலாகி விடாதா? ஏற்கனவே, தமிழக அரசு ஊழியர்களின், 'செயல்பாடு' அனைவரும் அறிந்ததே. நிலைமை இவ்வாறு இருக்க, கருணை அடிப்படையில் ஏராளமானோர் வேலைக்கு சென்றால், அரசு இயந்திரம் நகருமா; வேலை நடக்குமா என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், எங்களுக்கு எதிராக, அரசியல் செய்கிறார். 'அரசின் அலட்சியத்தால் தான், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, 17 பேர் இறந்தனர்' என்கிறார். அரசுக்கும், அந்த உயிர் பலிகளுக்கும் என்ன சம்பந்தம்?

'டவுட்' தனபாலு: எதிர்க்கட்சித் தலைவர் அல்லவா, அதனால், அப்படித் தான் பேசுவார். நல்லவேளையாக, சுவர் இடிந்ததற்கு, உங்கள் அரசே காரணம் என, சொன்னார்... விட்டால், 'தமிழகத்தில் பலத்த மழை பெய்ததற்கும், நீங்கள் தான் காரணம்' என, உங்களை நோக்கி கை காட்டாமல் விட்டார். அவரின் அரசியல் நீங்கள் அறியாததா என்பதே, என், 'டவுட்!'

தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு: உலக தமிழராய்ச்சி நிறுவனத்தில், ஆராய்ச்சி மாணவர்களுக்கு, ஓராண்டுக்கான ஹிந்தி மொழி பயிற்சியை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்துள்ளார்; அதற்காக, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இது, கடும் கண்டனத்திற்குரியது.

'டவுட்' தனபாலு: இது ஒரு குற்றமா... 'எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையிலும், தமிழகத்தில் ஹிந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது' என, புள்ளிவிபரம் தெரிவிக்கிறது; அது, உங்களுக்கு தெரியாதா? மேலும், 'தி.மு.க., பிரமுகர்கள் நடத்தும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஹிந்தி மொழி கற்பிப்பதை நிறுத்த வேண்டும்' என, அ.தி.மு.க.,வினர் கூறுகின்றனரே; அது உங்கள் காதில், இதுவரை விழவில்லையோ என்பதும், 'டவுட்' ஆக இருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X