பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணங்களை உடனே ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

Added : டிச 04, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: ''சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை, உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்' என, பொன் மாணிக்கவேலுக்கு, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக, பொன் மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவர், 2018 நவ., 30ல் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற நிலையில் ஓய்வு பெற்றார். அன்றே, அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக,
 ஆவணங்களை உடனே ஒப்படைக்க  பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவு

சென்னை: ''சிலை கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்களை, உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்' என, பொன் மாணிக்கவேலுக்கு, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக, பொன் மாணிக்கவேல் பணியாற்றி வந்தார். அவர், 2018 நவ., 30ல் ஐ.பி.எஸ்., அதிகாரி என்ற நிலையில் ஓய்வு பெற்றார். அன்றே, அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓராண்டுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.அதன்படி, பொன் மாணிக்கவேலின் பணிக்காலம், நவ., 30ல் முடிந்தது. அவரை, பணியில் இருந்து விடுவிப்பதாக, தமிழக அரசு அறிவித்தது. அவரிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அரசு உத்தரவிட்டது.பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிடக்கோரி, பொன் மாணிக்கவேல் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசிடம் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி, பொன் மாணிக்கவேலுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக அன்பு நியமிக்கப்பட்டு, பதவியேற்று உள்ளார்.

இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி, கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங், மீண்டும் பொன் மாணிக்கவேலுக்கு, மின்னஞ்சல் வாயிலாக அறிவுறுத்தி உள்ளார். அதில், 2012ல் இருந்து, இந்தாண்டு நவ., 30 வரை, அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சமர்ப்பிக்க, பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணியால், காலதாமதம் ஏற்படுவதாக, பொன் மாணிக்கவேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை உடனடியாக, பொன் மாணிக்கவேல் சமர்ப்பிக்காவிட்டால், அவர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
07-டிச-201907:48:35 IST Report Abuse
kalyanasundaram GREAT BOON TO CORRUPT PERSONS INVOLVED IN THEFT OF IDOLS FROM TEMPLES ETC ETC . GOD BLESS THE GREAT PONMANIKKAVEL
Rate this:
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
05-டிச-201922:01:36 IST Report Abuse
s.rajagopalan அவ்வளவுதான் ஊத்தி மூடிடுவாங்க இதில் அரசியல்வாதி, போலீஸ் அதிகாரிகள் மற்றும் பலரின் கை வரிசை இருந்திருக்குமே ...விடுவார்களா ?
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
05-டிச-201909:37:10 IST Report Abuse
RajanRajan நீதியை ரொம்ப மதிச்சு நடக்கிற ஒரு அரசு இந்த தமிழக அரசாக்கும். படா டூபாக்கூர்களா. ஆவணங்களை வாங்கி அப்படி ஒரு சிலை திருட்டே நடக்கல்லேன்னு அத்தனை ஆதாரங்களையும் அழித்து கோர்ட்டின் கண்ணை கட்டிடுவானுங்க. அப்புறம் என்ன அந்த வானளாவிய அதிகார பிரகஸ்பதிகள் வானத்தை பார்த்துகினே இருப்பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X