சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம் : முதல் அணு உலை

Added : டிச 04, 2019
Advertisement

இந்தியாவில் பல இடங்களில் அணு உலைகள் செயல்படுகின்றன. இங்கு அணுக்கரு பிளவு அடிப்படையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. நாட்டின் முதல் ஆய்வு அணு உலை 'அப்சரா'. இது மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 1956 ஆகஸ்டில் செயல்படத் துவங்கியது. பிரிட்டன் உதவியுடன் இந்த அணு உலை அமைக்கப்பட்டது. இதில் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நீச்சல் குளம் வடிவில் அமைக்கப்பட்டது. 2009ல் இந்த அணு உலை மூடப்பட்டது. பின் தரம் உயர்த்தப்பட்டு, 2018 செப்., 10ல் மீண்டும் திறக்கப்பட்டது.


தகவல் சுரங்கம் : முதல் ஆசிய பெண்மணி


கோல்கட்டாவை சேர்ந்தவர் ஆரதி சாஹா. 1940ல் பிறந்தார். நான்கு வயதில் நீச்சல் பழக தொடங்கினார். 1959 செப்., 29ல் வெற்றிகரமாக ஆங்கிலக்கால்வாயை 14 மணி மற்றும் 20 நிமிட நேரத்தில் நீந்திக்கடந்தார். ஆங்கிலக்கால்வாயில் நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்மணி என்ற பெயர் பெற்றார். 1960ல் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றார். இவ்விருதை பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை ஆனார். அட்லாண்டிக் பெருங்கடலில் ஆங்கிலக் கால்வாய் அமைந்துள்ளது. தெற்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு பிரான்ஸ்க்கு இடையில் அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X