கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குடிகாரர் தொந்தரவுகளை தடுக்க என்ன நடவடிக்கை: ஐகோர்ட்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை; 'குடிகாரர்களால் ஏற்படும் தொந்தரவுகள், சட்டம் -ஒழுங்கு பிரச்னைகளை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்டதற்கு, 'டாஸ்மாக்' நிர்வாகத்திடம் இருந்து உருப்படியான பதில் வரவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை, வடபழநியை அடுத்த நெற்குன்றம் பாதையில் இயங்கும், மதுக்கடையை மூடக் கோரி, உயர் நீதிமன்றத்தில், வாசுதேவன் என்பவர் தாக்கல் செய்த மனு:மதுக் கடையுடன், 'பார்' சேர்ந்து இயங்குகிறது. மதுக் கடை, பாருக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த, தனியாக வசதி இல்லை. அதனால், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்; இது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. குடிகாரர்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கின்றனர்; வாந்தி எடுக்கின்றனர். 'டாஸ்மாக்' கடை இயங்கும் கட்டடம், குடியிருப்புக்காக கட்டப்பட்டது. எனவே, குடியிருப்புக்கான பகுதியை, வணிக காரணங்களுக்கு பயன்படுத்த முடியாது. அதனால், மதுக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் அல்லது கடையை மூட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:இதுபோன்ற மனுக்கள் விசாரணைக்கு வரும் போதெல்லாம், குடிகாரர்களால் ஏற்படும் தொந்தரவு, அசுத்தம் செய்வது, சட்ட ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேள்வி கேட்டுள்ளோம்; இதுவரை, உருப்படியான பதில் வரவில்லை.'பார்' உடன் இணைந்த மதுக்கடையை, டாஸ்மாக் நிர்வாகம் நடத்துவதால், சமூக முன்னேற்றம்எதுவும் நடந்துவிட போவதில்லை. இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பார்க்கும்போது, ஒன்றும் சரியில்லை என்பது தெரிகிறது. குடியிருப்புவாசிகளுக்கு தொந்தரவு இருப்பதை, புகைப்படங்கள் உணர்த்துகின்றன.எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க, ஆரம்ப முகாந்திரம் உள்ளது. இல்லையென்றால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், தொடர்ந்து துன்பப்படுவர். அதனால், மதுக் கடையை நடத்த, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

மனுவுக்கு பதில் அளிக்க, மாநகராட்சி சார்பில், வழக்கறிஞர் கே.சவுந்தரராஜன், கலெக்டர் சார்பில், சிறப்பு பிளீடர் தம்பிதுரை, 'நோட்டீஸ்' பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X