பொது செய்தி

தமிழ்நாடு

பதற்ற ஓட்டுச்சாவடிகள் பட்டியல் அனுப்பவதில் தாமதம்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை: பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பாமல், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் தாமதப்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், ஊரகப் பகுதிகளில் உள்ள, 1.89 லட்சம் பதவிகளுக்கு, வரும், 27 மற்றும் 30ம் தேதிகளில், இரண்டு கட்டமாக, தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட தேர்தலில், 1.64 கோடி வாக்காளர்களும், இரண்டாம் கட்டத்தில், 1.67 கோடி வாக்காளர்களும் ஓட்டளிக்க உள்ளனர். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பேரை, அவர்கள் தேர்வு செய்யவுள்ளனர். இதற்காக, ஓட்டுச்சீட்டுகள், ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என, பொதுமக்கள் விரும்புகின்றனர். எனவே, பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு, மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் பட்டியலை தயாரித்து அளிக்கும்படி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, ஆணையம், ஒரு மாதத்திற்கு முன்பே உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், தேர்தல் அறிவித்த பின்னும், இந்த பட்டியலை, அதிகாரிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவில்லை. தேர்தல் நடக்காது என்ற நம்பிக்கையில், மாவட்ட கலெக்டர்கள் இருப்பதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், மாவட்ட கலெக்டர்கள் மீது, ஆணையம் அதிருப்தி அடைந்துள்ளது. மனு தாக்கல், நாளை துவங்கவுள்ள நிலையில், இது குறித்து, தலைமை செயலர் சண்முகத்திடம் முறையிட, ஆணையம் முடிவெடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X