பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.22 லட்சம் நிதி

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை: மாநகராட்சி குப்பை லாரி மோதி இறந்த, காவலர் குடும்பத்தினருக்கு, காவல் துறையினர் சுய விருப்பத்தோடு வழங்கிய, 22.07 லட்சம் ரூபாயை, அவரது மனைவியிடம், முதல்வர் இ.பி.எஸ்., வழங்கினார்.

மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த, மேலவளவு கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுமார்; சிறு வயதில் பெற்றோரை இழந்தார். அவரது சித்தப்பா, அவரை கன்னியாகுமரி மாவட்டத்தில், மண்டைக்காட்டில் உள்ள, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டார்.அங்கிருந்தபடி, 10ம் வகுப்பு வரை படித்தார். கடினமாக உழைத்து, 2003ல் தமிழ்நாடு காவல் துறையில், இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேர்ந்தார். சென்னை, கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில், நுண்ணறிவு பிரிவில் பணிபுரிந்து வந்தார்.தான் ஆதரவின்றி வளர்ந்ததால், தன்னைப் போல் ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, 2005ல் தன் ஊரை சேர்ந்த, விமலா என்ற ஆதரவற்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்கள், சென்னை, புனித தோமையார் மலை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்களுக்கு, கோபிகா ஸ்ரீ, 13, கோகிலாஸ்ரீ, 13, லத்திகாஸ்ரீ, 8, என, மூன்று மகள்கள் உள்ளனர். அவர்கள் முறையே, எட்டு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்தாண்டு, நவ., 20 இரவு, பழனிகுமார் பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில், வீட்டிற்கு சென்றார். முல்லைநகர் அருகே சென்றபோது, மாநகராட்சி குப்பை லாரி, அவர் மீது மோதியது. அதே இடத்தில், அவர் இறந்தார்.அவரது குடும்பத்திற்கு, சொந்த ஊரில் உறவினர்கள் யாரும் இல்லை. பழனிகுமார் மறைவுக்கு பின், அவரது குடும்பத்தினருக்கு, எவ்வித ஆதரவும் இல்லாத நிலை ஏற்பட்டது.

இதையறிந்த காவல் துறையினர், அவர் குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தனர். காவல் துறையினர் தங்களால் முடிந்த தொகையை அளித்தனர். அந்த வகையில், 22 லட்சத்து, 7,700 ரூபாய் வசூலானது. இந்தத் தொகையை, நேற்று பழனிகுமார் மனைவி விமலாவிடம், முதல்வர் இ.பி.எஸ்., தன் முகாம் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X