பொது செய்தி

தமிழ்நாடு

மோசமான சாலைகளும் விபத்துக்கு காரணம்: பராமரிப்பு குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை: 'ஹெல்மெட் அணியாதது மட்டுமல்ல; மோசமான சாலைகளும், முறையான பராமரிப்பின்மையும், உயிர் பலிக்கு காரணம் தான்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை, கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற சட்டம் மற்றும் விதியை, கண்டிப்புடன் அமல்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை, கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. விதிகளை மீறியவர்களுக்கு எதிராக, எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்ற விபரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி., சார்பில் சட்டம் - ஒழுங்கு உதவி ஐ.ஜி., சாம்சன், போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்தார்.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், ''போக்குவரத்து விதிகள், கண்டிப்புடன் அமல்படுத்தப் படுகின்றன. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. தற்போது, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள், 'இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பலியாவதற்கு, ஹெல்மெட் அணியாமல் இருப்பது மட்டுமே காரணமாக கூற முடியாது; சாலையின் தரம், முறையான பராமரிப்பின்மையும், விபத்துக்கு காரணம் தான்' என, கருத்து தெரிவித்தனர்.

சாலைகளை மேம்படுத்துவது; குறிப்பாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளை பராமரிப்பது; போக்குவரத்து விதிகளை முழுமையாக அமல்படுத்துவது குறித்து, கூடுதல் அறிக்கை அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 9 க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.உதவி ஐ.ஜி., தாக்கல் செய்த அறிக்கைl சென்னை தவிர்த்து, தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணியாமல் சென்ற வகையில், 2018அக்., வரை, 25.50 லட்சம் வழக்குகள்; இந்த ஆண்டு அக்., வரை, 47.70 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் அணிந்து விபத்தில் பலியானவர்கள், 2018 அக்., வரை, 317; இந்த ஆண்டு அக்., வரை, 347 பேர் ஹெல்மெட் அணியாமல் பலியானவர்கள், 2018 அக்., வரை, 4,480 இந்த ஆண்டு அக்., வரை, 3,555. ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடிகள் பொருத்தாத வகையில், 2018 அக்., வரை, 4,752 வழக்குகள்; இந்த ஆண்டு அக்., வரை, 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, உதவி ஐ.ஜி., தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X