பொது செய்தி

தமிழ்நாடு

குட்கா வழக்கில் ஆஜராக அவகாசம் கொடுங்கள்: அமலாக்க துறைக்கு போலீஸ் அதிகாரிகள் கடிதம்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை: 'குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை; அவகாசம் வேண்டும்' என, போலீஸ் அதிகாரிகள், அமலாக்கத் துறைக்கு, கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், 2016ல், சென்னை அருகே, செங்குன்றத்தில் இருந்த குட்கா குடோனில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.சிக்கிய டைரிஅப்போது, ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில், தடையை மீறி, குட்கா விற்பனை செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கு, சென்னை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே, சட்ட விரோதமாக பணப் பரிவர்த்தனை நடந்த புகார் தொடர்பாக, அமலாக்கத் துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக, மத்திய - மாநில அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீது, சட்ட விரோதமாக, 639 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட பலருக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
பதில்
இதில், டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோர், சொந்த வேலை காரணமாக, விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று கூறி, அமலாக்கத் துறையினரின் கேள்விக்கு, கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பணியில் உள்ள, ஐ.ஜி., ஸ்ரீதர், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் உள்ளிட்டோர், 'பணி காரணமாக விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை; அவகாசம் வேண்டும்' என, அமலாக்கத் துறைக்கு, கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது பணியில் உள்ள, ஐ.ஜி., மட்டத்திலான அதிகாரிகள் சிலரிடம், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப் பட்டதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X