அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பாஸ்டேக்' அவகாசம்: வாசன் கோரிக்கை

Added : டிச 04, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'பாஸ்டேக்' அவகாசம்: வாசன் கோரிக்கை

சென்னை: 'சுங்கச்சாவடிகளில், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில், கட்டணம் வசூலிக்கும் முறையை, அடுத்த ஆண்டு, ஜன., 1 முதல் அமல்படுத்த வேண்டும்' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் கட்டணம் செலுத்த, 'பாஸ்டேக்' திட்டத்தில் பதிவு செய்வதற்கான காலத்தை இன்னும் நீட்டித்து, அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்த, மத்திய அரசு அறிவிப்பு ெவளியிட வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு பயன் தரும் நோக்கத்தில், இந்த திட்டத்தை செயல்படுத்த நினைக்கும் மத்திய அரசு, அதற்காக பதிவு செய்வதற்கான காலத்தை சற்று நீட்டித்தால், பயனுள்ளதாக இருக்கும்.வரும், 15ம் தேதி வரை காலக்கெடு வைத்துள்ள மத்திய அரசு, இன்னும், 15 நாட்கள் கூடுதலாக வழங்கி, ஜன., 1 முதல், பாஸ்டேக் வாயிலாக கட்டணம் பெறும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். சுங்கக் கட்டணத்தை வசூலிக்கும் முயற்சிகளில் காட்டும் ஆர்வத்தை, சாலையின் தரத்தை மேம்படுத்துவதிலும், சாலை பாதுகாப்பிலும், சாலை விதிகளை கடைப்பிடிப்பதிலும் காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
05-டிச-201914:55:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆங்.. அப்புறம்?
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
05-டிச-201906:04:46 IST Report Abuse
Indhuindian ஏதோ நானும் இருக்கேன்னு ஏதாவது ஒரு அறிக்கை விடணுமா? டிசம்பர்ன்னா உடனே ஜனவரின்னு ஒரு அறிக்கை ஜனவரின்னா உடனே பிப்ரவரின்னு அறிக்கை. எப்படியோ பேப்பர்லயே பேர் வந்தா போதும்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
05-டிச-201903:53:15 IST Report Abuse
 nicolethomson சரியான முறையில் சொல்லியிருக்கீங்க , விபத்தில்லா சாலை என்பதுதான் முக்கியம் பாஸ்ட் டேக் எதுக்கு இவ்ளோ வேகமா திணிக்கப்படுத்து?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X