அரசியல் செய்தி

தமிழ்நாடு

கல்வி கடன் திட்டத்தில் திருத்தம்

Added : டிச 04, 2019
Advertisement

சென்னை: 'மாணவர்களின் உயர் கல்விக்கான கட்டணம் முழுவதையும், உத்தரவாதமற்ற கடனாக வழங்குவதற்கு, மத்திய அரசு, கல்வி கடன் திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார்.

அவரது அறிக்கை:ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள், உயர் கல்வி கற்க பெரும் தடையாக இருப்பது, கல்விக் கட்டணம் தான். உயர் கல்விக்கான கட்டணம், லட்சக்கணக்கில் இருப்பதால், அதை ஏழை, நடுத்தர மாணவர்களால், செலுத்த முடியாது. அந்த நிலையை மாற்றுவதற்காக, கல்விக் கடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலும் கூட கல்விக் கடன் வழங்க, வங்கிகள் சொத்துக்களை ஈடாக கேட்டதால், ஏழைகளுக்கு பயன் அளிக்கவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு வகையில் தான், உத்தரவாதம் இல்லாமல் கடன் வழங்குவதற்காக, கல்விக் கடனுக்கான உத்தரவாத நிதியத்தை, மத்திய அரசு ஏற்படுத்தியது. உயர் கல்விக்கான கட்டணம் முழுவதையும், உத்தரவாதமற்ற கடனாக வழங்கும் வகையில், இந்த திட்டத்தை திருத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பொதுப்பிரிவு மாணவர்கள், இடஒதுக்கீடு பிரிவினர் என்ற பாகுபாடு இல்லாமல், உயர் கல்வி கற்க விரும்பும் அனைவருக்கும், கல்விக் கடன் வழங்கும்படி, வங்கிகளை, மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X