பொது செய்தி

இந்தியா

கேரள அணைகளில் சாட்டிலைட் போன் வசதி

Added : டிச 04, 2019
Advertisement

மூணாறு: கேரளாவில் பேரிடர் காலங்களில் அணைகளில் தடையின்றி பணிகள் தொடர 'சாட்டிலைட் போன்' வசதியை நீர்வளத்துறை ஏற்படுத்துகிறது.

கேரளாவில் உள்ள அணைகளில் பெரும்பாலானவை அலைபேசி வசதி இல்லாத நிலையில், தொலைபேசி சேவையும் அவ்வப்போது தடைபட்டு வருகிறது. 2018 ல் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின்போது, அலைபேசி சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு,அணைகளின் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து தகவல்கள் பரிமாற முடியாமல் போனது. அதனால் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதனை தவிர்க்க பேரிடர் காலங்களில் அணைகள் குறித்து தடையின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள 'சாட்டிலைட் போன்' வசதி ஏற்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக அந்த வசதியை நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நெய்யாறு, மலம்புழா அணைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன் செயல்பாட்டை பொருத்து மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளிலும், அதனை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X